வாகன விபத்து : 2 பெண்கள் உட்பட 7 பேர் பலி

0
339
9 year old boy killed road accident Kinniya Police Trincomalee

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். (accident 7 dead,Tamilnews,Srilanka Tamilnews)

வலஸ்முல்ல, குட்டியாகல, பதுளை, மொரட்டுவ, கடவத்த, கம்பஹா மற்றும் வெலிகட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வலஸ்முல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் கெப் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 44 வயதுடைய நபரும், குட்டியாகல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 53 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பதுளை – மஹியங்கன பகுதியில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதி உயிரிழந்துள்ளதுடன், வெலிக்கடை பகுதியிலும் மோட்டார் சைக்கிளுடன் மோதி 56 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மொரட்டுவ கோரலவெவ பகுதியில் இடம்பெற்ற லொரி விபத்தில் ஒருவரும், கடவத்த பகுதியில் துவிச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சீதுவ – உடுகம்பொல வீதியில் கெஹெல்பத்தர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:accident 7 dead,accident 7 dead,