நடுகாட்டில் தொங்கிய மர்ம சடலம் : திருகோணமலையில் சம்பவம்

0
591
trincomalee forest dead body

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.(trincomalee forest dead body,Tamilnews)

குறித்த சடலம் மிகவும் உருகுலைந்த நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 65 – 70 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இது கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சடலத்தின் முழங்கால்கள் மடக்கப்பட்ட நிலையில் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டு உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் செருப்பும், 30 அடி தூரத்தில் இவரது கைக்குட்டை மற்றும் மேலாடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேலாடையில் திருகோணமலையில் இருந்து கண்ணியாவுக்கு சென்ற பஸ் டிக்கட் காணப்படுவதா எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:trincomalee forest dead body,trincomalee forest dead body,