நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்

0
1190
Minister Education Radhakrishnan comments conspiracy opposition parties

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்று ஒரு கும்பல் ஆயத்தமாகி வருவதாகவும் இதனை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். (Minister Education Radhakrishnan comments conspiracy opposition parties)

பாடசாலைகளில் மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிக்கும் முகமாக கல்வி அமைச்சினால் முன்னெடுக்கபட்டுவரும் ‘நல்ல நண்பன் நூல் நண்பன்’ என்ற வேலைத்திட்டத்தின் தழிழ் மொழி மூலமான ஆரம்ப நிகழ்வு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளையில், நாட்டின் ஒற்றுமை மிக முக்கியம். நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்காக பல்வேறு சர்ச்சைகள் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இனங்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கில் மீண்டும் புலிகள் உருவாகுவதாகவும் ஏனைய பகுதிகளில் சிங்கள மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுவதாகவும் முஸ்லிம் மக்களுக்கு அநியாயம் விளைவிக்கப்படுவதாகவும் அரசியல் பிழைப்புக்காக தமக்கு வேண்டியவற்றை பேசி மக்களை குழப்புகின்ற வேலையை எதிர்கட்சிகள் பல திட்டமிட்டுச் செய்துகொண்டு வருகின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Minister Education Radhakrishnan comments conspiracy opposition parties