பிரான்ஸ் சுரங்கத்தில் நள்ளிரவில் நின்ற ரயிலால் பரபரப்பு!

0
304
midnight train France mining train

சத்தலேயில் இருந்து புறப்பட்ட ரயில் ஒன்று திடீரென நடு வழியில், சுரங்கத்துக்குள் தடைப்பட்டு நின்றுவிட்டது. இதன்போது ரயிலின் கதவை திறக்கமுடியாமல் பயணிகள் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. midnight train France mining train

செவ்வாய்க்கிழமை இரவு, Châtelet நிலையத்தில் இருந்து 8.13 மணிக்கு புறப்பட்ட முதலாம் வழி மெற்றோ ரயில், Bastille மற்றும் Saint-Paul நிலையங்களுக்கிடையே தடைப்பட்டு நின்றது. சுரங்கத்தின் நடுவில் திடீரென ரயில் தரித்து நின்றதால் பயணிகள் அச்சத்தில் மூழ்கினார்கள்.

உடனடியாக RATP ஐ தொடர்புகொள்ள பலர் முயற்சித்ததாகவும், ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். ரயிலுக்குள் மிக கடுமையான வெப்பம் நிலவியதகவும், மூச்சு எடுக்ககூட மிகவும் சிரமபட்டதாகவும் அங்கிருந்த பயணிகள் அச்சத்துடன் குறிப்பிட்டனர்.

ரயிலின் கதவினை தாம் திறக்க முற்பட்டதாகவும், ஆனால் தானியங்கி கதவு என்பதால் திறக்க முடியவில்லை எனவும் பயணிகள் குறிப்பிட்டனர். அத்துடன் குளிரூட்டிகள் வேலை செய்யவில்லை எனவும், கர்ப்பிணி பெண் ஒருவர் அச்சத்தில் அழுது கொண்டிருந்ததாகவும், ரயிலிற்குள் ஒரு வழியாக தண்ணீர் போத்தல் ஒன்றை கண்டுபிடித்து அவருக்கு வழங்கியதாகவும் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ரயில் சிக்கிக்கொண்டதாகவும், 9 மணிக்கு ரயில் இயங்கும் எனவும், பயணிகள் பயப்பிடத்தேவையில்லை எனவும் RATP இனால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 9 மணி தாண்டியும் ரயில் நகரவில்லை.

அத்துடன் RATP இடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும் தெரிவித்த பயணிகள், பின்னர் ஒருவழியாக போராடி ரயிலின் கதவை திறந்து அதுவழியாக தாம் வெளியேறியதாக குறிப்பிட்டனர். சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ள Hôtel de Ville நிலையத்தை நோக்கி சுரங்கத்தினூடாக தாம் நடந்து சென்றதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், ‘அவசர வெளியேற்றத்துக்கான வழிகள் எதுவும் அமைக்கப்படவில்லை’ என பல வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கவலையோடு குறிப்பிட்டனர். ‘தீப்பிடித்து எரிந்தால் அனைவரும் இறக்க நேரிடும்’ என பிரித்தானியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் குறிப்பிட்டார்.
ஆனால் போக்குவரத்து நள்ளிரவு தாண்டி 1.50 மணியளவில் இயல்புக்குத் திரும்பியது.

tags :- midnight train France mining train

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்