காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி

0
973
02 year old child killed Gampola

காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (02 year old child killed Gampola)

கம்பளை, வெலிகல்லை, கூரகல பிரதேசத்தை சேர்ந்த ரசீகா ரஷ்மி வீரசேன என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் உறவினர் ஒருவர் கொண்டு வந்த காட்டுப்பன்றி இறைச்சியை நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்கள் சமைத்து சாப்பிட்டுள்ளதுடன், இந்த குழந்தைக்கும் உண்ணுவதற்கு கொடுத்துள்ளனர்.

காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட சிறுமி, சற்று நேரத்தில் நோயுற்றதனால் அவளின் தாய் மருந்து கொடுத்துள்ளார்.

எனினும் குறித்த சிறுமியை கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கூரகல கிராமத்தில் பலர் காட்டுப்பன்றி இறைச்சியை நேற்று முன்தினம் பலர் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர், மரண பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், தவுலுகல பொலிஸார் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 02 year old child killed Gampola