கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி

0
828
13 year old boy killed Kilinochchi

கிளிநொச்சி – முழங்காவில் அன்பு புரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவனின் கழுத்தில் கயிறு இறுகி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (13 year old boy killed Kilinochchi)

கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து இறுகியே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புபுரம் பகுதியில் உள்ள மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன், பாடசாலை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், மாலை நேரம் தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போன்று குறித்த பகுதியில் விளையாடுவதாகவும் இன்றும் விளையாடிக் கொண்டிருக்கையில் குறித்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் கழுத்து இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

உடனடியாக குறித்த சிறுவனின் கழுத்தில் சிக்கியிருந்த இருந்த கயிற்றை சிறுவனின் தாயார் அவிழ்த்து, பாதுகாப்பாக முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 13 year old boy killed Kilinochchi