மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு

0
467
happy news students Second term completed

அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற சிங்கள, தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் ஆகஸ்ட் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. (happy news students Second term completed)

எனவே அன்றைய தினம் பாடசலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், 3 ஆம் தவணைக்காக செப்டெம்பர் மாதம் 03 திகதி திங்கள் பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணையின், இரண்டாவது கட்டம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முடிவடைந்து, மூன்றாம் தவணைக்காக ஆகஸ்ட் 27 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; happy news students Second term completed