குறைவான சம்பளம் பெற்றீர்களா? அப்பணத்தை மீளப் பெற என்ன வழி?

0
403
FWO announced claiming $ 2.5 million announced companies Australia

ஆஸ்திரேலியாவில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை விடவும் குறைந்த ஊதியம் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து அறிவிடப்பட்ட சுமார் 2.5 மில்லியன் டொலர்கள் எவராலும் உரிமைகோரப்படாத நிலையில் தம்வசம் உள்ளதாக Fair Work Ombudsman (FWO) அறிவித்துள்ளது. FWO announced claiming $ 2.5 million announced companies Australia

இப்படியாக  குறைவான ஊதியம் வழங்கப்பட்ட சுமார் பத்தாயிரம் பேருக்குச் சொந்தமான இத்தொகையின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக Fair Work Ombudsman கூறியுள்ளது.

குறைந்த ஊதியம் பெற்ற தொழிலாளி அந்தப் பணியிடத்திலிருந்து விலகிச் சென்றிருக்கும்பட்சத்தில் அவருடன் தொடர்புகொள்ள முடியாதுபோனால் அவருக்குச் சேரவேண்டிய தொகை Fair Work Ombudsman நிதியத்தில் சேர்ந்துவிடும்.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தொழிலாளர்கள் எவராவது தமது முன்னாள் பணியிடங்களில் குறைந்த ஊதியம் பெற்றிருப்பதாக கருதினால் அந்தத் தொகையை மீளப்பெறலாமா என்பது தொடர்பில் Fair Work Ombudsman-ஐத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியாளருக்குச் சேர வேண்டிய தொகை அவரது முதலாளியிடமிருந்து அறவிடப்பட்டிருந்தால் அதனை Fair Work Ombudsman-இடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த 2010ம் ஆண்டு முதல் இவ்வாறு உரிமைகோரப்படாத சுமார் 2 மில்லியன் டொலர்கள் அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

tags :- FWO announced claiming $ 2.5 million announced companies Australia