பிரான்ஸ் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசி தடை!

0
337
French schools colleges ban mobile

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் பிற மின்சார சாதனங்கள் பிரான்ஸில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து 2018 செப்டெம்பர் முதல் தடைசெய்யப்பட உள்ளது. பாராளுமன்றம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்ததாலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது. French schools colleges ban mobile 

இந்த ஆண்டு ஜூன் மாதம் இது சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பாராளுமன்றம் மூலம் இதற்கான சட்டம் பாடசாலைகளுக்கு பிறப்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதிலுமுள்ள ஆரம்ப பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தபடவிருக்கிறது.

அவசரகால மருத்துவ விவகாரம் போன்ற சில சூழ்நிலைகள் தவிர, உணவு இடைவேளை உட்பட பாடசாலை நாளன்று மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற மின்சார சாதனங்களைப் பயன்படுத்தவோ அல்லது அணுகவோ முடியாது.

தொலைபேசிகளின் சத்தம், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் பாடசாலை மாணவர்களின் படிப்பு மீதான ஆர்வம் குறைவதானாலேயே இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் மிகவும் பிரபலமான Minecraft மற்றும் Pokémon Go போன்ற பிரபல விளையாட்டுகள் விளையாடுவதை குறைப்பதும் இதன் ஒரு நோக்கமாகும்.

tags :- French schools colleges ban mobile

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்