2 மில்லியன் யூரோ பெறுமதியான போதை மருந்து ராட்டர்டாம் தொடர்மாடியிலிருந்து மீட்பு

0
119
euro two million worth crystal meth Rotterdam flat tamil news

கடந்த வாரம் வியாழக்கிழமை ராட்டர்ட்டமில் உள்ள Zuidwijk ல் அமைந்திருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டை சோதனையிட்ட போது, 13 கிலோ crystal meth போதை மருந்தையும் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பில் கொலம்பியாவைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். மருந்துகளின் விற்பனை மதிப்பு 2 மில்லியனுக்கும் மேற்பட்ட யூரோக்கள் என பொலிசார் தெரிவித்தனர்.euro two million worth crystal meth Rotterdam flat tamil news

குடியிருப்பாளர்கள் அற்ற அந்த அபார்ட்மெண்ட்டில் ஆள் நடமாட்டம் இருப்பதையும், அதனுள் செல்வோரும் வெளியே வருவோரும் பெரிய பைகளை எடுத்து செல்வதும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

“மருந்துகள் அல்லது ஆயுதங்களை சேமிப்பதற்கே, இது போன்ற ‘குடியிருப்பாளர்கள் அற்ற’ அபார்ட்மெண்ட்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் அடிக்கடி காண்கிறோம்” என பொலிசார் தெரிவித்தனர்.

இந்த அபார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்த பொலிசார், அங்கு இருந்த கொலம்பிய மனிதனை உடனடியாக கைது செய்தனர். மீட்கப்பட்ட போதை மருந்துகளை தடயவியல் அமைப்பு உறுதிப்படுத்தியது.

இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்கிறது.

tags :- euro two million worth crystal meth Rotterdam flat tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்