மசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது

0
838
Round three brothels hotels

பேலியகொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில், மூன்று விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. (Round three brothels hotels)

கெலனிய பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், 10 பெண்களையும் மூன்று முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் முகாமையாளராக பணிபுரிந்துள்ளார். இந்த விபச்சார விடுதிகள் பேலியகொடை 4 ஆம் மைலுக்கும் 6 ஆம் மைலுக்கும் இடையில் நடத்தப்பட்டு வந்துள்ளன.

இங்குவரும் ஆண் ஒருவரிடம் இருந்து 1000 ரூபா அறவிடப்படுவதாகவும் பெண்களுடன் தொடர்புகொள்ள வேறாக பணம் அறவிடப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முகாமையாளர் இருவரும் கடவத்தை மற்றும் பட்டிசந்தியை சேர்ந்தவர்கள் எனவும் கைதுசெய்யப்பட்ட பெண் முகாமையாளர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த 10 பெண்களும் வெலிப்பன்னை, திருகோணமலை, அனுராதபுரம், தம்புத்தேகமை, இரத்தினபுரி, ஹட்டன் பிரதேசவாசிகள் எனவும் இவர்கள் 20 மற்றும் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை மஹர நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Round three brothels hotels