இராணுவ கோப்ரலை நிர்வாணப்படுத்தி தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் கைது

0
672
Nude attack Army Corporal arrested Police officers

நிரபராதிகளான இராணுவ கோப்ரல் மற்றும் இளைஞரை நிர்வாணமாக்கி மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதால் ஆத்திரமடைந்த மக்கள் இங்கிரிய பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். (Nude attack Army Corporal arrested Police officers) 

இதனால் 28 ஆம் திகதி இரவு இப்பகுதியில் பதற்றம் நிலவியது. பின்னர் ஹொரனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன வெலிகல சந்தேக நபர்களான எஸ்.ஐ ஒருவரையும், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரையும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரையும் கைதுசெய்து வைத்தியர் ஒருவரிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது, எஸ்.ஐயும் பொலிஸ் கான்ஸ்டபிலும் அதிக மதுபோதையில் இருந்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புலத்சிங்கல பிரதேசத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் இப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையங்களை உசாராக இருக்குமாறு பணிக்கப்பட்டிருந்தன.

இதனால் இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மதுபோதையில் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, பிரித் மத வழிபாட்டில் கலந்துகொண்டுவிட்டு வீட்டிற்குச் சென்ற இருசக்கர வண்டியில் பயணித்த இளைஞர்கள் இருவரை சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது, ஒருவர் தான் இராணுவ கோப்ரல் எனவும் கொழும்பில் உள்ள ஒரு இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாக அடையாளம் காட்டிய போதிலும், பிரதான வீதியில் முழங்காலிட வைத்து தாக்கியுள்ளனர்.

இதன்பின்னர் இவர்களைக் கைதுசெய்து இங்கிரிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கும் வைத்து தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Nude attack Army Corporal arrested Police officers