ஆஸ்திரேலியாவின் ஐம்பது வருட தடகள சாதனையை முறியடித்துள்ள அகதி சிறுவன்

0
410
Joesph Deng Record Breaking SriLanka News

ஆறு வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த சூடானிய அகதி சிறுவன் Joseph Deng ஆஸ்திரேலியாவின் ஐம்பது வருட தடகள சாதனையை முறியடித்துள்ளார். Joesph Deng Record Breaking SriLanka News

Joseph Deng என்ற இருபது வயது இளைஞனே இந்த சாதனையை நிலைநாட்டி அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற Diamond League athletics meet 2018 தடகளப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

சூடானை சொந்த இடமாகக்கொண்ட Joseph Deng அங்கு இடம்பெற்ற உள்நாட்டுப்போரினால் தனது தாயாருடன் கென்யாவுக்கு இடம்பெயர்ந்து சென்று அங்கு தடுப்பிலிருந்து பின்னர் 2004 இல் ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார்.

ஓட்டப்போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்ட Joseph Deng பிறிஸ்பனில் தொடர்ச்சியாக தடகளப்போட்டிகளில் பங்குகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற Diamond League athletics meet 2018 போட்டியில் ஆஸ்திரேலிய சார்பில் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட Joseph Deng அங்கு ஆஸ்திரேலியாவின் 50 வருட சாதனையை முடிறித்தார்.

1968 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய தடகள வீரர் Ralph Doubell ஒரு நிமிடம் 44 செக்கன்கள் 40 மில்லி செக்கன்களில் 800 மீற்றர் தூரத்தை ஓடியிருந்தார். Joseph Deng இந்த தேசிய சாதனையை 19 மில்லி செக்கன்களினால் முறியடித்துள்ளார்.

வெற்றிப்பாதையில் நடைபோடுகின்ற Joseph Deng 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.

tags :- Joesph Deng Record Breaking SriLanka News