கைதடியில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்; அப்பகுதியில் பதற்றம்

0
497
sword attack incident Kaithady

யாழ்ப்பாணம் கைதடி வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குள் முகங்களை மூடிக்கொண்டு நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த இருவரை வாளால் வெட்டியுள்ளனர். (sword attack incident Kaithady Tension area)

இந்த வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் நேற்றிரவு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி வடக்கில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கைதடியிலுள்ள உப தபாற்கந்தோருக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருவர் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் திடீரென சென்ற 8 பேர் கொண்ட குழுவின் 04 பேர் வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளனர்.

ஏனைய நான்கு பேர் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தினர். கடையின் உரிமையாளரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

வீதியில் சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதும் அவர் தனது மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு ஓடித் தப்பியுள்ளார்.

சில நிமிட நேரம் அங்கு நின்று அட்டகாசம் செய்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்து சென்றதுடன், பொலிஸாருக்கு இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; sword attack incident Kaithady Tension area