இலங்கை வாழைப்பழங்களுக்கு சீனாவில் சந்தைப்படுத்தல் வசதி!

0
702

இலங்கையில் பயிரிடப்படும் உயர் தரமான, அம்புல் ( புளி வாழை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ஆகிய ரகங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. Sri Lanka Bananas Getting China Republic Market Tamil News

சீன அரசாங்கத்துடன் இலங்கை விவசாய அமைச்சு, சீனச் சந்தைக்கு இலங்கை வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.

சுமார் 29 வகையான வாழைப்பழங்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல இலங்கையை தாயகமாக கொண்டவை.

மேலும் இலங்கையில் வாழைப் பழம் பரவலாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், 450,000 மெட்றிக் தொன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுக்கான சந்தை வசதியை பெற்று கொடுத்தலே இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும்.

இலங்கை அரசின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites