பிரதமர் நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்

0
351
Prime Minister visits tomorrow Batticaloa

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர் விஜயமாக நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு பயணம் செய்யவுள்ளார். (Prime Minister visits tomorrow Batticaloa)

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதியில் முற்பகல் 10.00 மணியளவில் சுமார் 4 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய மாடிக் கட்டிடத் தொகுதியை வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன் வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்விலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Prime Minister visits tomorrow Batticaloa