இரத்தினபுரியில் நடுவீதியில் பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : தண்டனை விபரம்

0
681
Ratnapura Girl Batti Attack Video

நாட்டையே உலுக்கிய சம்பவமொன்றின் தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ளது. Ratnapura Girl Batti Attack Video

கடந்த 2014 ஆம் ஆண்டு இரத்தினபுரியில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பொலிஸ் அதிகாரியொருவர் பெண்ணொருவரை மிகவும் மோசமாக பொது இடமொன்றில் வைத்து தாக்கியிருந்தார். அவர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியே தாக்குதலை நடத்தியிருந்ததார்.

எவ்வித காரணமும் இன்றி அப்பெண் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் இத்தாக்குதல் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எவ்வித காரணமும் இன்றி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பெண் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த பெண்ணின் தாயாரையும் வழக்கொன்றின் அடிப்படையில் கைதுசெய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தொடுத்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதன்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் தண்டப்பணமாக வழங்கப்படவேண்டுமென பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட பெண்,விபசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தனது வறுமை நிலை காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டதாக அப்பெண் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அவரது நிலையைக் கருத்தில் கொண்டே நீதிபதி இவ் உத்தரவை வழங்கியிருந்தார்.