60 இலட்சம் ரூபாவுக்கு மேல் திருடிய நபர் வசமாக மாட்டினார்

0
548
60 lakhs stolen person arrested

சுமார் 8 வருட காலமாக நாட்டில் பல பிரதேசங்களில் 60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் ஒருவரை 9 இலட்ச ரூபா மதிப்புடைய தங்க நகைகளுடன் புலத்சிங்ஹல பொலிஸார் கைது செய்துள்ளனர். (60 lakhs stolen person arrested)

கெக்கிராவ பிரதேசவாசியான 37 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான சந்தேக நபர் புலத்சிங்ஹல, கிராந்துருகோட்டே, சபுகஸ்கந்தை, மஹியங்கனை, கம்பஹா மற்றும் திஸ்ஸமஹாராம உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்காலிகமாக வாழ்ந்துவந்துள்ளார்.

இதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு முதல் திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புலத்சிங்ஹல, கலஹேன பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 48,000 ரூபா திருடியதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி சந்தேக நபர் இங்கிரிய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் இரண்டாம் மனைவியிடம் தான் வேறுவேறு தொழில் செய்வதாக பாசாங்கு செய்து, 8 வருடங்களாக பொலிஸாரிடம் பிடிபடாமல் பலரின் உடமைகளை திருடியுள்ளார்.

சபுகஸ்கந்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஒன்றரை இலட்ச ரூபா மதிப்புடைய தங்க நகைகள், கிராந்துருகோட்டே பிரதேசத்தில் ஒரு இலட்சம் எழுபத்தைந்தாயிரம் ரூபா மதிப்புடைய தங்க நகைகள் உள்ளடங்க திருடியதுடன், பல குற்றச் செயலிலும் ஈடுபட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் திருடுவதற்க்காக பயன்படுத்திய கையுறைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் மதுகமை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 60 lakhs stolen person arrested