சுற்றுலா சென்ற சிறை கைதிகள் !

0
616

Sharjah prisoners taken visit museum Islamic civilization midleeast Tamil news

ஷார்ஜா சிறைவாசிகள் ஷார்ஜாவிலுள்ள இஸ்லாமிய நாகரீக அருங்காட்சியகத்தை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர்

அமீரகத்தில் செயல்படும் சிறைக்கூடங்களை பொதுவாக தண்டனை மற்றும் மறுவாழ்விற்கான மையம் என்றே அழைக்கின்றனர்.

ஷார்ஜா மறுவாழ்வு மையங்களில் உள்ள சிறைவாசிகளிலிருந்து ஆண், பெண் என இருபாலரிலிருந்தும் நன்னடத்தை மிக்கவர்களை தேர்வு செய்து ஷார்ஜாவின் இஸ்லாமிய நாகரீகத்தை எடுத்துக்கூறும் அருங்காட்சியகத்தை காண அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது அவர்கள் கைவிலங்குகள் இல்லாமல் சுதந்திரமாக மியூஸியத்தை சுற்றிவரவும் இஸ்லாமிய விழுமியங்களின் உயர்வை அறிந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ஷார்ஜா போலீஸாரின் ஏற்பாட்டின் கீழ் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளும் அல்கரைன் பகுதியிலுள்ள ஜூரோ-6 எனும் மாலுக்கு வரவழைக்கப்பட்டு சந்தோஷமாக கலந்துரையாட ஒருநாள் முழுவதும் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் குழந்தைகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதுடன் சிறைவாசிகள் தயார் செய்த பல்வேறு கைவினைப் பொருட்களை கொண்டு கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் சிறைவாசிகள் தண்டனை முடிந்து வெளியேறிய பின் குற்றமற்ற வாழ்க்கைக்கு, அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharjah prisoners taken visit museum Islamic civilization midleeast Tamil news