பிறந்தநாள் விருந்தை முடித்துக்கொண்டு வெளியில் வந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
304
Paris Car shock waited girl came birthday party

ஞாயிற்றுக்கிழமை காலை பரிஸ் போர்த்து லா சப்பல் பகுதியில் பெண் ஒருவரின் கார் பாறை கல்லை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Paris Car shock waited girl came birthday party

Sarcelles (Val-d’Oise) பகுதியில் இருந்து பிறந்தநாள் விருந்தை முடித்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெண்னொருவர் விடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

காரிற்குள் 10 மற்றும் 20 வயதுடைய மகள்கள் இருந்ததாகவும், மேலும் அப்பெண்ணின் மருமகளும் இருந்ததாக அறிய முடிகிறது. போர்த்து லா சப்பல் பகுதியில் உள்ள BP எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கார் நிறுத்தப்பட, எதிர்ப்பட்ட நபர் ஒருவர் பாறைக்கல்லை கொண்டு தாக்கியுள்ளார். காரின் பயணிகள் பக்க கண்ணாடி மேல் தாக்க, கண்ணாடியை உடைத்துக்கொண்டு கல் உள்ளே வந்துள்ளது.

இந்த தாக்குதலில் காரை ஓட்டி வந்த பெண் இலேசான காயங்களுக்கு உள்ளானார். அதிஷ்டவசமாக ஏனைய மூவருக்கு எவ்வித ஆபத்துக்களும் எழவில்லை. மேலும், 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த அப்பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

tags :- Paris Car shock waited girl came birthday party

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்