செம்மணியில் இன்றும் அகழ்வு பணி; சர்வதேச நிபுணர்களை அழைக்க வேண்டும்

0
620
Human bones mining work still semmani jaffna

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் மனித எலும்புக்கூடு காணப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது. (Human bones mining work still semmani jaffna)

செம்மணி வீதியில் நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக நிலம் தோண்டப்பட்ட போது மண்டையோடு, மற்றும் எழும்பு எச்சங்கள் கண்nடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதை அடுத்து, குறித்த இடத்தில் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.

யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன் குறித்த சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை நேரில் ஆராய்ந்ததுடன், சட்ட வைத்திய அதிகாரியைக் கொண்டு சோதனைகளை நடத்துமாறு பணித்தார்.

சட்ட மருத்துவக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்ற போதிலும், பொலிஸ் உயர் அதிகாரி வருகை தராத காரணத்தால் அன்றைய தினம் அகழ்வுப் பணி நடக்கவில்லை.
இந்த நிலையில், இன்றைய தினம் ஆகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டை அகழ்ந்தெடுக்கும் பணிகளிலும் எலும்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணிகளிலும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவை அனுமதிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கு, அவற்றை ஆதாரத்துடன் உலக நாடுகள் அறிவதற்கு தற்போது வடக்கு மாகாணத்தில் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளும் ஒரு சாட்சி இதுவென்றும் எனவே அவற்றைப் பகுப்பாய்வு செய்து போர்க்குற்றத்தை நிரூபிக்க பன்னாட்டு நிபுணர் குழுவை அரசு அனுமதிக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகனத்தின் பல பிரதேசங்களிலும் அண்மைய நாள்களாக மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் எந்தளவுக்கு மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ளது என்ற உண்மைகள் இப்போது மெல்லமெல்ல வெளிவரத் தொடக்கி விட்டன.

எனவே அரசு இந்த விடயத்தில் நேர்மையாகச் செயற்பட வேண்டும். அதற்கு இங்கு உடனடியாக வெளிநாட்டு நிபுணர் குழுவைப் பகுப்பாய்வுக்காக அனுமதிக்க வேண்டும். போரின் போதும் அதற்கு முன்னைய காலத்திலும் எத்தனையோ தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுள்ளனர், கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

பன்னாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்து உண்மையைக் கூறுவதன் மூலமே போர்க் காலத்திலும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினர் எந்தளவுக்கு போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்க முடியும். எனவே இதனை நாம் முறையாக அணுக வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Human bones mining work still semmani jaffna