இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி

0
349
England World Championship

இங்கிலாந்துக்காரர்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் உயிரினமான நத்தையை வைத்து பந்தயம் நடத்தியுள்ளனர். (England World Championship )

நார்ஃபோக் எனும் இடத்தில் (NORFOLK) நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி நடத்தப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான நத்தைகள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டன. வட்ட வடிவ மேஜையில் அடுத்தடுத்து பல்வேறு வண்ணங்களில் வட்டங்களை வரைந்து போட்டி தூரம் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் நத்தையே வெற்றியாளர் என்பது இந்த போட்டியின் விதி. பந்தய நேரம் தொடங்கியதும், பார்வையாளர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பரித்தாலும், நத்தைகள் தன்னியல்போடு மிகவும் நிதானமாக ஊர்ந்து சென்றன.

பந்தயத்தில் இங்கிலாந்தின் க்ரிம்ஸ்டன் (Grimston) என்ற கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நத்தை சாம்பியன் பட்டத்தினை வென்றது. வினோதமான இந்தப் பந்தயம், 1960-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

tags :- England World Championship

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************