பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் பணச்செலவு ரூ 1,483 கோடி..! (விவரம்)

0
201
narendra Modi's foreign tour Rs.1,483 crore details

பிரதமர் நநேரந்திர மோடியின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் 42 முறை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணத்தில் 84 நாடுகளை சுற்றியிருக்கிறார்.narendra Modi’s foreign tour Rs.1,483 crore details

இதன் பயணச்செலவு மட்டும் ரூ 1 484 கோடி என நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி வரையிலான காலத்தில், பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க மொத்தம் ரூ.1,088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேகாலக்கட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2016-17ஆம் ஆண்டில் 18 நாடுகளுக்கும், 2017-18ஆம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்றுள்ளார். பிரதமர் மோடியின் பயணத்துக்காக கடந்த 2014-15ஆம் ஆண்டில் தனியார் விமானங்களுக்கு ரூ.93.76 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.117 கோடியும், 2016-17ஆம் ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

மோடி பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 42 முறை மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

கடந்த 2015-16ஆம் ஆண்டில் அதிகப்பட்சமாக 24 நாடுகளை மோடி சுற்றியிருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயணத்தின் இரு நாடுகளுக்கிடையே இருக்கும் நேரடி ஹாட்லைன் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :