சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்

0
774
Aloysius contacted underworld factions

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அர்ஜூன் அலோசியஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் எச் அறையில் இருந்து மீட்கப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகள், ஐந்து சிம் அட்டைகள் தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் பல உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (Aloysius contacted underworld factions Shocking information prison)

இந்த சிம் அட்டைகள் மூலம் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் குற்றச் செயல்களுடன் இந்த சிம் அட்டைகள் தொடர்புள்ளதாகவும் இதுதொடர்பில் உரிய விசாரணைகளின் பின்னர் உரிய நீதிமன்றங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ஹரிப்பிரியா ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

எனினும் குறித்த எச். அறையில் 30 கைதிகள் உள்ள நிலையில், திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் அலோசியஸ், பலிசேன தொடர்புபட்டுள்ளதாகக் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தொலைபேசிகள், சிம் அட்டைகள் தொடர்பில் டயலொக், எடிசலாட், எயார்டல், ஹச் ஆகிய தொலைபேசி சேவை வழங்குநர்களிடம் இருந்து அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மொபிட்டல் நிறுவனத்திடம் இருந்து மட்டும் அறிக்கை கிடைக்கவில்லை என்றும் ஹரிப்பிரியா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிக்கை கிடைத்ததும் பகுப்பாய்வு செய்து குற்றம் ஒன்று வெளிப்படுத்தப்படுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Aloysius contacted underworld factions Shocking information prison