130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்

0
952
Morethan 130 Tamils Memorial Day Massacre

இலங்கை இராணுவத்தினரால் ஈழத் தமிழர்கள் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட உடும்பன்குள படுகொலை நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. (Morethan 130 Tamils Memorial Day Massacre)

தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்தும், பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொலை செய்துள்ளனர்.

அம்பாறை வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமம்.

இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களும் இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்பமுடியாமல் போனது.

இராணுவத்தினராலும், ஊர்காவற் படையினராலும் 130 க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1986 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் உடம்பன்குளத்திலுள்ள மலையடிவார வயல்களில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து, வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் இருந்து கவச வாகனங்களில் சென்ற இராணுவத்தினரும் ஊர்காவற்படையினரும் சுற்றிவளைத்து கைதுசெய்து ஆண், பெண் குழந்தைகள் என்ற பேதமின்றி சுட்டுப்படுகொலை செய்தனர்.

இங்கு பிடிக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக சித்தரவதை செய்து படுகொலை செய்தனர்.

பெண்களை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த பலர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 21 ஆம் திகதி வணபிதா சந்திரா பெர்ணான்டோவின், தலைமையில் அங்கு சென்று குழுவினர் அரைகுறையாக எரிந்த நிலையில் இருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவத்தில் 130 க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இனப்படுகொலையில் நினைவு தினம் அம்பாறை உடும்பன்குள பகுதியில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Morethan 130 Tamils Memorial Day Massacre