மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
751
continuing tragedy Maskeliya Hospital

மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் இன்று வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற 300 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். (continuing tragedy Maskeliya Hospital)

இதன் காரணமாக வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பகுதியை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்களும், மஸ்கெலியா பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வைத்தியசாலைக்கு முன்பாக சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற நோயாளர்களும், பிரதேச மக்களும் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன், சிகிச்சைக்கென வந்தவர்களும், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றவர்களும் நேற்று மாலை வெளியேற்றப்பட்டனர்.

இதனால் சிகிச்சை பெற்ற நோயாளர்கள் உட்பட வெளி நோயாளர்களும் சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, மிக மோசமான நிலையில் இருந்த நோயாளர்களை கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனவே ஜனாதிபதியும், சுகாதார அமைச்சரும், மத்திய மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; continuing tragedy Maskeliya Hospital