(goodbye yahoo messenger discontinued)
19ம் நூற்றாண்டின் கடைசியில் வந்து இணையதளத்தில் தகவல் பரிமாற்றத்துடனான நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய யாஹூ மெசஞ்சர் நேற்றுடன் மூடப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர், ஹேங்கவுட் என பல தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஆப்கள் வெளிவந்துவிட்டன. இதனால் யாஹூவின் பயனாளர்கள் மிகவும் குறைந்துவிட்டதால், நேற்று ஜூலை 17ம் திகதியுடன் யாஹூ மெசஞ்சர் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.