ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

0
106
AntmanandTheWasp Movie Review Hollywood Cinema

எவாஞ்சலின் லில்லியிடம் அவரது அப்பாவான மைக்கேல் டக்ளஸ் தான் ஆன்ட்மேனாக இருந்த போது மக்களை காப்பாற்றுவதற்காக ஏவுகணை ஒன்றை அழிக்க சென்றதாகவும், அப்போது வாஸ்ப்பான எவாஞ்சலினின் அம்மா அந்த விபத்தில் மாயமாகிவிட்டதாக கூறுவார். எவாஞ்சலினின் அம்மாவை மீட்கும் பாகமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.AntmanandTheWasp Movie Review Hollywood Cinema

கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படத்தில் கேப்டன் ரோஜர்ஸ் உடன் கூட்டணி வைத்ததற்காக தற்போதைய ஆன்ட்மேனாகிய பால் ருத் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அவருடன் அவரது பெண் குழந்தையும் அந்த வீட்டில் தங்கி வருகிறது.

வாஸ்ப் இன்னும் உயிரோடு இருப்பதாக தான் உணர்வதாக கூறும் மைக்கேல் டக்ளஸ், எவாஞ்சலினின் அம்மாவை மீட்பதற்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறார். அதேநேரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் பால் ருத்துக்கு எவாஞ்சலின் மற்றும் அவரது அம்மா பேசுவது போல் தோன்றுகிறது. இதை வாய்ஸ் மெசேஜாக மைக்கேல் டக்ளசுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதையடுத்து பால் ருத்துக்கு பதிலாக ஒரு எறும்பை அவரது வீட்டில் வைத்துவிட்டு, பால் ருத்தை அவர்களது உதவிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதன்பின்னர் எவாஞ்சலினின் அம்மாவை மீட்க அவர்களது திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுகின்றனர். அதனை செயல்படுத்த ஒரு கருவி தேவைப்பட அதனை எடுத்து வர ஆன்ட்மேன் மற்றும் வாஸ்ப் செல்கின்றனர்.

அதேநேரத்தில் ஹன்னா ஜான் கமானும் அதே பொருளை எடுக்க வருகிறாள். கடைசியில் அந்த பொருளை யார் எடுத்தார்கள்? எவாஞ்சலினின் அம்மாவை காப்பாற்றினார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆன்ட்மேனாக நடித்துள்ள பால் ருத் சிறிய தோற்றம், பெரிய தோற்றம் என இரண்டிலும் கவர்கிறார். வாஸ்பாக நடித்திருக்கும் எவாஞ்சலின் லில்லி சண்டைக்காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். ஹன்னா ஜான் கமென், மிசசெல் பிஃப்பர், வால்டன் காகின்ஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப பொறுப்பு வகித்துள்ளனர்.

ஆக்‌ஷன், அதிரடி, காமெடியுடன் ரசிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் பெய்டன் ரீட். சிறிய தோற்றம் முதல் மாபெரும் தோற்றம் என ஆன்ட்மேனை வித்தியாசமாக காட்டியிருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. குழந்தைகளும் ரசிக்கும்படியாக படத்தை உருவாகி இருக்கிறார்கள். தமிழ் வசனங்களும் ரசிகர்களை கவர்கிறது.

கிறிஸ்டோஃபி பெக்கின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். டேன்ட்டி ஸ்பினோட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக சிறப்பாக வந்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் ”ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்” அதிரடி…!

News Credit : cinema.maalaimalar

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

கமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-AntmanandTheWasp Movie Review Hollywood Cinema