முதல் மனைவியை கைவிட்ட கஜேந்திரகுமார்! காரணம் இது தான்!

0
919

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அண்மையில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தமையும் அதன் பின்னர் இரண்டாவதாக இன்னுமொரு பெண்ணை மறுமணம் முடித்தமையும் யாவரும் அறிந்ததே. TNPF Leaders Gajendrakumar Divorce Reason Ex wife Said

ஆனால் இதன் பின்னால் யாருமே அறியாத சோகம் ஒன்று ஒளிந்துள்ளமை தெரியவந்துள்ளது. கஜேந்திரகுமாரால் கைவிடப்பட்ட முதல் மனைவி தனக்கு நேர்ந்திருக்கும் அநியாயம் பற்றி வாய் திறந்துள்ளார்.

அதாவது கஜேந்திரகுமார் தனது முதல்மனைவிக்கு பிள்ளைப்பேறு இல்லை என்பதை காரணம் காட்டியே விவாகரத்து பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கஜேந்திரகுமாரின் இந்த முடிவால் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டிருக்கும் அவரின் முதல் மனைவி இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி இந்த விடயம் கஜேந்திரகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக இருப்பினும் பொறுப்பான அரசியல் தளம் ஒன்றில் இருக்கும் நபர் ஒருவர் இப்படியாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் பல தரப்புகளும் விசனம் தெரிவித்துள்ளன.

பிள்ளைப்பேறு என்பதை காரணம் காட்டி கஜேந்திரகுமார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் சமூகவலைத்தளத்திலும் பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites