திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் பேசுவோம்! சம்பந்தன் மீண்டும் உறுதி!

0
294
TNA SAmbanthan Plans Talk Maithiri Planned Resettlement

வடக்கில் இடம்பெறுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பது, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றை இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. TNA SAmbanthan Plans Talk Maithiri Planned Resettlement

இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியப் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவித்த இரா.சம்பந்தன் குறித்த விடையங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக தாங்கள் ஜனாதிபதியை சந்தித்து வருவதாக கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites