பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை

0
601
student committed suicide writing letter

இங்கிரிய, போருவெதண்டை பிரதேசத்தில் தனது இல்லத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் தனது பெற்றோருக்கும் மூத்த சகோதரனுக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். (student committed suicide writing letter)

தன்னை வீட்டில் பரீட்சைக்காக கட்டாயப்படுத்துவது மற்றும் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம் என கூறுவதனால் மனச்சோர்வடைந்து தனது பெற்றோரை பயமுறுத்துவதற்காக தற்கொலை செய்வதாக தூக்கில் தொங்குவது போன்று பாசாங்கு செய்துள்ளார்.

இதன்போது, வீட்டில் இருந்த மாணவனின் தாயார் சத்தமிட்டதை அடுத்து, அயலவர்கள் தூக்கில் தொங்கிய மாணவனை மீட்டு, இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த மாணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியடையாத நிலையில், இந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மரண பரிசோதனையில் இந்த மரணம் தூக்கிலிட்டுக் கொண்ட வேளை, முள்ளந்தண்டு முறிந்துள்ளதனால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; student committed suicide writing letter