நட்சத்திர ஹோட்டலில் இளைஞர், யுவதிகள் செய்த செயல்; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

0
588
Kerala Cannabis capture star hotel

அம்பலன்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நடன நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரளா கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Kerala Cannabis capture star hotel)

அம்பலன்கொடை பிரதேசத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 14 ஆம் திகதி இரவு டிஸ்கோ டான்ஸ் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல பகுதியில் இருந்து இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கேரளா கஞ்சா மறைத்து வைத்திருந்த 10 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காகச் செல்லும் சிலரிடம் போதைப் பொருள் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த ஹோட்டலின் முன் பாதைக்கு தடை ஏற்படுத்தி, பொலிஸ் மோப்ப நாய்கள் மூலம் கேரளா கஞ்சா வைத்திருந்தோரை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாகனங்களில் பயணித்த ஒரு குழுவை சோதணை செய்த போதே, கேரள கஞ்சா மறைத்து வைத்திருந்தவர்களை அடையாளம் காணமுடிந்துள்ளது.

முகநூலில் அறிமுகமான நூற்றுக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் இந்த நிகழ்சியில் பங்குபற்றுவதற்காகச் சென்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக தென் பகுதியிலுள்ள பிரதி அமைச்சர் ஒருவர் கலந்துகொண்டார் எனவும் இவர் சுமார் இரண்டு மணி நேரம் தங்கியிருந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Kerala Cannabis capture star hotel