நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..!

0
372
Jhanhvi Kapoor become Indian prime minister

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Jhanhvi Kapoor become Indian prime minister

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

மராத்தியில் காதலுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம், ”சாய்ரத்”. வசூலில் சக்கைப்போடு போட்ட இப் படம் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகர் இஷான் கட்டார் இணைந்து நடித்து ”தடக்” என்ற பெயரில் இந்தியில் தயாராகி உள்ளது.

சஷாங் கைத்தான் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இப் படம் வரும் 20-ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை பிரபலம் ஆக்கும் வகையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகியான ஜான்வி கபூரும், நாயகனான இஷான் கட்டாரும் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அவர்களிடம், “உங்கள் இருவரில் யாரால் இந்திய பிரதமர் ஆக முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

அப்போது சற்றும் தாமதிக்காமல் ஜான்வி கபூர், “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என பதில் அளித்தார். இந்த பதிலை யாரும் எதிர்பார்க்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் உடனே சுதாரித்துக் கொண்ட ஜான்வி, “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தயவு செய்து பத்திரிகைகளில் போட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அதைக் கேட்டு அரங்கில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஜூங்கா படத்தில் ரசிகரை அறிமுகப்படுத்திய விஜய்சேதுபதி..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Jhanhvi Kapoor become Indian prime minister