அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள்

0
522
fifa foot ball match final today all hotels wide screen television

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2018 இன்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. fifa foot ball match final today all hotels wide screen television

இலங்கை நேரப்படி இரவு 08.30 மணிக்கு நேரடி ஒளிஃஒலிபரப்புகள் ஆரம்பமாகின்றன.
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள Luzhniki உதைபந்தாட்ட அரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. மிகப் பெரிய அரங்கமாக கருதப்படும் இதில் 81,000 பேர் அமரக்கூடிய வசதி உண்டு.

உலகிலுள்ள கோடிக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள இந்தப் போட்டிiயு இலங்கையிலும் கண்டுகளிக்க அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரையிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 1–0 என பெல்ஜியத்தையும், குரோஷியா 2–1 என இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.

பிரான்ஸ் கடந்த 1998 இல் சாம்பியன் பட்டம் வென்றது. 2006 இல் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. தற்போது மூன்றாவது முறையாக இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் குரோஷியா கடந்த 1998 இல் மூன்றாம் இடம் பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
fifa foot ball match final today all hotels wide screen television

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites