மம்முட்டியின் பேரன்பு பட டீசர் ரிலீஸ்..!

0
528
Peranbu Official First Teaser released

தமிழில் ”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட மனதை உருக்கும் படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ”பேரன்பு”.(Peranbu Official First Teaser released)

இப் படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ”தங்கமீன்கள்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் பி.எல். தேனப்பன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் ஃபஸ்ட் லுக், போஸ்டர்கள் மற்றும் புரோமோ வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரும், பாடலும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்தப் படம் சீன திரைப்பட விழா, ரோட்டர்டம் திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப்புகழ் பெற்ற திரைப்பட விழாக்களில் ‘ரிஷரக்‌ஷன்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் திரையிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த திரைப்பட விழாவில் நடந்தவற்றை விடியோ தொகுப்புகளாக இணைந்து ‘பேரன்பு’ ஃபஸ்ட லுக் புரோமோ வெளியானது. அதில் பலரும் கண்கலங்கி பாராட்டினர்.

மேலும், இந்த படத்தின் டீசரில் இடம்பெற்ற, ”ஒரு குழந்தை உடல்நலக்குறைவோடு பிறந்தால் அவரின் பெற்றோரை பார்த்து உங்கள் குழந்தை ஏன் மற்ற குழந்தை மாதிரி இல்லை என்று எளிதாக கேட்டுவிடலாம். ஆனால் அந்த குழந்தை போல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று அதை புரிந்த பிறகு தான் தெரியும் என்று தெரியும். அக்கேள்வி எவ்வளவு பெரிய வன்முறை என்று..” இந்த வரிகள் அனைத்தும் பலரையும் கேள்வி கேட்கும் விதமாக அமைந்துள்ளது.

அத்துடன் இரண்டு நிமிட டீசரில் தன்னுடை ஆழ்ந்த நடிப்பு திறன் மூலம் படம் எப்படி இருக்க போகிறது என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறார் மம்முட்டி. மேலும், ரம்மியமான சூழலில் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்ணில் ஒத்திக் கொள்ளும்படி உள்ளது. யுவனின் மனதை வருடும் பிண்ணனி இசையும் டீசரை வேற லெவலுக்கு எடுத்து செல்கிறது.

Video Source : Saregama Tamil

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Peranbu Official First Teaser released