போலி நாணயத் தாள்களை மாற்ற முயன்ற கடற்படை சிப்பாய் ஒருவர் கைது

0
398
import Export Controller Department arrested Bribery Commission

(tamil news navy troop member arrested mathavaachi fake money)

மதவாச்சி, பூனாவ பிரதேசத்தில் வைத்து மூன்று போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அந்த பிரதேசத்தில் உள்ள மின் உபகரண விற்பனை நிலையத்திற்கு சென்று 5000 ரூபா மற்றும் இரண்டு 1000 ரூபா போலி நாணயத் தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது, கடை உரிமையாரால் அந்த நாணயத்தாள்கள் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டு அது சம்பந்தமாக மதவாச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

(tamil news navy troop member arrested mathavaachi fake money)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites