இங்கிலாந்தில் தமிழ் இளைஞன் குத்திக்கொலை

0
1064
Risaan Udayakumar Murder

இங்கிலாந்தின் வெட்போர்ட்டில் தமிழ் இளைஞன் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Risaan Udayakumar Murder

ரிசாஹன் உதயகுமார், என்ற 18 வயதான வெம்லியைச் சேர்ந்த இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பில் 16 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவ்விளைஞனும் தமிழர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பப் பிரச்சினையே கொலைக்கான காரணமென தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

இவ் இளைஞர்கள் இருவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ரிசாஹனின் உயிரிழப்பானது தமது குடும்பத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.