நான் ஜனாதிபதியானால் தமிழ், முஸ்லிம்களுக்கு இதனை கட்டாயம் செய்வேன் : கோத்தபாய

0
1336
president election Gotabaya Rajapaksa tamil muslims

ஒருவேளை நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் கௌரவமான பிரஜையாக வாழும் சூழலை உருவாக்குவேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(president election Gotabaya Rajapaksa tamil muslims)

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தேசிய பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை பெற்றுத் தருவீர்கள்? தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விருப்புகின்றீர்கள்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லிம், சிங்களம் என யாராக இருந்தாலும் அனைவரும் கௌரவமான பிரஜையாக வாழும் சூழலை உருவாக்குவேன்.
அனைத்து மக்களுக்கும் வீடுகளை பெற்றுக்கொள்ளும் உரிமை, தொழில்பெறும் உரிமை, வாழும் உரிமை, கல்வி கற்கும் உரிமை என்பவற்றை சமமான முறையில் பெற்றுக்கொடு நடவடிக்கை எடுப்பேன்.

தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் விருப்பமான வியாபாராத்தை செய்வதற்குமான சந்த்தரப்பத்தை உறுதிப்படுத்துவேன்.
குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு 2 இலட்ச மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டால் அவர்கள் அனைவருக்கும் உயர்கல்வியை பெற்றுக்கொடுக்கும் நிலைமையை உருவாக்குவேன்.

தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

சிறுபான்மை மக்கள் ராஜபக்ஷமாரைப் பார்த்து பயப்பட வேண்டாம். எம்மைப்பற்றி பொய்யான பிரசாரம் செய்யப்படுகின்றது.
நாங்கள் ஒரு இனத்தை பார்த்து வேலை செய்பவர்கள் அல்லர்.

ராஜபக்ஷமாரின் நெருங்கிய உறவினர்களாக தமிழர்களும் உள்ளனர்.

எனவே எம்மை நம்புங்கள். சிறந்த பௌத்தர்கள் அனைத்து இன மக்களையும் நேசிப்பார்கள்.

பௌத்தர்கள் தமிழர்களுக்கும் முஸிம்களுக்கும் எதிரானவர்கள் என தவறான பிரசாம் செய்யப்படுகின்றது. நாம் அனைவருக்கும் சமமாகவே சேவையாற்றுவோம் என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:president election Gotabaya Rajapaksa tamil muslims,president election Gotabaya Rajapaksa tamil muslims,president election Gotabaya Rajapaksa tamil muslims,