க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் அடையாள அட்டை விநியோகம்

0
534
National Identity Card issued end next month GCE O level

(National Identity Card issued end next month GCE O level)

இந்த வருடம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தகவல் வெளியிட்டுள்ளார்.

துரித வேலைத்திட்டத்திற்கு அமைவாக அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை செயற்றிறன் மிக்கதாக இடம்பெற்றமையே அடுத்த மாதம் அவற்றை விநியோக்கிக்கக் கூடியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 12 ஆகும்.

தற்போது சில மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

வவுனியா, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மூன்று பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய மேலும் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களம்

(National Identity Card issued end next month GCE O level)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites