தவறிழைக்கும் இடத்திலேயே அபராதம் – சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

0
303
driving rules again drivers spot fine Lankan latest Tamil news

சாரதிகள் தவறிழைக்கும் இடத்திலேயே அபராதம் விதிக்கப்படுவதற்கான நடைமுறைகள் அமுலுக்கு வரவுள்ளன. driving rules again drivers spot fine Lankan latest Tamil news

நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக வேகத்தில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் அபராதம் நாளைமுதல் மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

அத்துடன், வீதிப் போக்குவரத்து நடைமுறைகளை மீறி பயணிக்கின்றவர்களுக்கு எதிராக அறவிடப்படும் ஆயிரம் ரூபாய் அபராதம் 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

இந்த புதிய அபராத அறவீட்டில் முன்னதாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அபராதம் விதிக்கப்பட்ட சில குற்றங்கள் உட்பட பத்து குற்றங்கள் உள்ளடங்குகின்றது.

அத்துடன், இந்த புதிய திருத்தத்தின்படி கடந்த காலங்களில் 20 ரூபாவில் இருந்து அறவிடப்பட்ட அபராதங்கள் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அபராதங்களை செலுத்துவதற்கு 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அபராதம் விதிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் செலுத்தப்படுகின்ற அபராதம் இருமடங்காக அதிகரிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
driving rules again drivers spot fine Lankan latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites