உடலுறவுக்கு மறுத்தவருக்கு நடந்த கொடூரம்

0
739

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை அவரது நண்பரே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Abuse India Andhra

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி பெற்று வந்த பிரம்மா ரெட்டி (27) என்பவர் தர்சி பகுதியை சேர்ந்த சாய் கிரணுடன் ஃபேஸ்புக்கில் பழகி வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பிரம்மா ரெட்டி தனது பிறந்தநாளில், சாய் கிரணை சந்திக்க அவரது பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாய் கிரண் தனது மற்ற நண்பர்களுடன் பிரம்மா ரெட்டியை அழைத்துக்கொண்டு பன்னை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அனைவரும் மது அருந்திய நிலையில், போதையில் பிரம்மா ரெட்டியை சாய் கிரண் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். ஆனால் இதற்கு பிரம்மா ரெட்டி கடுமையாக எதிர்த்ததுடன், வெளியில் சொல்லிவிடுவதாக கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாய் கிரண், அவரது நண்பர்களுடன் சேர்ந்து பிரம்மா ரெட்டியை கொலை செய்து உடலை பன்னை வீட்டின் அருகிலிருந்த புதிரில் வீசிவிட்டு தலைமறைவாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, தலைமறைவாக இருந்த சாய் கிரண் மற்றும் அவரது நண்பர்களை தேடி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த கொலையை மறைக்க உதவிய சாய் கிரணனின் நண்பர்களில் ஒருவரின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.