யாழில் 3 பெண்களை கட்டிவைத்து நடந்த கொள்ளை : கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணை

0
527
jaffna kopay robbery

யாழ்ப்பாணத்தில் மூன்று பெண்களைக் கட்டிவைத்து அவர்களிடம் இருந்த ஆறு பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. (jaffna kopay robbery)

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் உள்ள வீடொன்றில், நேற்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் இறங்கிய திருடர்கள் பெண்களைத் தாக்கி அவர்களைக் கட்டி வைத்ததுடன், அவர்கள் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த நகைகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் காரணமாக பாதிப்படைந்த மூன்று பெண்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna kopay robbery,jaffna kopay robbery,jaffna kopay robbery