விஜய்சேதுபதி – திரிஷா ஜோடியாக நடிக்கும் ”96” பட டீசர் ரிலீஸ்..!

0
521
96 Movie Official Teaser released Vijay Sethupathi

பிரேம்குமார் இயக்கத்தில், முதல்முறையாக விஜய்சேதுபதி – திரிஷா ஜோடியாக நடிக்கும் ”96” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.(96 Movie Official Teaser released Vijay Sethupathi)

இந்த டீசரில் விஜய் சேதுபதியும் திரிஷாவும், கண்களால் காதலை கடத்தும் காட்சி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

அத்துடன், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இருவரும் முதல்முறையாக இப்படத்தில் இணைந்து நடிப்பதால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் ”96” படத்தை, ”நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படத்தை ஒளிப்பதிவு செய்த சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், நேற்று காலை வெளியான நிலையில், அடுத்ததாக டீசர் நேற்று மாலை வெளியாகி உள்ளது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் இந்த டீசரின் மிகப்பெரிய பலம் என்று கூறலாம்.

மேலும் இந்த டீசரில், விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரின் கதாபாத்திரமும் மிகவும் உணர்ச்சிகரமானதாக காட்டப்பட்டுள்ளது. காதலர்கள் பல ஆண்டுகளுக்கு சந்திக்கும்போது நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களும், காதலை திரும்பி பார்க்கும் விதத்தில் கதை இருக்கும் என டீசர் சொல்கிறது.

திரிஷாவுக்கு மீண்டும் ஒரு ”விண்ணை தாண்டி வருவாயா” ஆக இருக்கும் என்பதை டீசர் காட்டுகிறது. மேலும், விஜய் சேதுபதிக்கு முழு நீள காதல் படமாகவும் இருக்கும் என தெரிகிறது.

ஆக மொத்தத்தில், விஜய் சேதுபதியின் இன்னொரு நல்ல படம் வெளியாகப் போகிறது என்று நம்பிக்கையை தருகிறது இந்த டீசர்.

Photo Credit : Google Image

Video Source : Think Music India

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

32 வயது திரைக்கதை எழுத்தாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-96 Movie Official Teaser released Vijay Sethupathi