வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய நாவல வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் மிக சூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றினை போலீசார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். Police Roundup Ayurveda Massage Centre 7 Arrested
இதன்போது ஏழு பேரை நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றினை சுற்றிவளைத்து நடத்தப்பட்ட தேடுதலில் பெலிஅத்த, கம்பஹா, மினுவங்கொடை, பொரள்ளை, அம்பலங்கொட மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 31,55,34,39,37,34 மற்றும் 40 வயதுடைய 7 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலக்கம் 4 அளுத்கடை நீதவானால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமை நேற்று இரவு 9.20 மணியளவில் வெலிகடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த எழுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது இந்நிலையத்தில் இருந்த மேலும் சில பெண்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட எழுவரையும் இன்று இலக்கம் 4 அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகட பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்