முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

0
904
Important notice three wheel drivers

கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து தண்டம் அறவிடப்படும் என வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான தேசிய சபை அறிவித்துள்ளது. (Important notice three wheel drivers)

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கரவண்டிகளில் சோதனை நடவடிக்கையை பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக அந்தச் சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து முச்சக்கரவண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு மீற்றர் இல்லாத முச்சக்கரவண்டிகளைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Important notice three wheel drivers