பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்

0
918
Discussion increasing bus fares

எரிபொருள் அதிகரிப்பு மற்றும் உடனடி தண்டப்பணம் 30 முறைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனால் தனியார் பஸ் வண்டி உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியில் உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Discussion increasing bus fares)

இதனால் எதிர்வரும் சில தினங்களில் தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசித்து வருவதாக அகில இலங்கை தனியார் பஸ் வண்டி கூட்டமைப்பின் தலைவர் ஸ்டான்லி பிரனாந்து தெரிவித்துள்ளார்.

நாள்தோரும் பஸ் வண்டி ஒன்றுக்கு டீசல் லீற்றர் 50 – 60 தேவைப்படுவதாகவும் இதனால் நாளாந்தம் 500 ரூபா மேலதிகமாக செலவிட நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் 7 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒரு கிழமைக்குள் பஸ் கட்டணமும் விகித ரீதியாக திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Discussion increasing bus fares