இங்கிலாந்தை இல்லாமல் செய்த குரோஷியா..! பிரான்சுடன் போராட தயாராகிறது..!

0
755
crotia wins england enters football worldcup finals

(crotia wins england enters football worldcup finals)
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மாஸ்கோவில் நேற்று இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரண் ட்ரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதன்பிறகு, முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் குரோஷிய அணி வீரர்கள் கடுமையாக போராடினர். இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68ஆவது நிமிடத்தில் அந்த அணியின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தன.

0வது நிமிடம் வரை மேலும் ஒரு கோல் அடிக்க வீரர்கள் தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்து விளையாடினர். இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷிய வீரர் மாரியோ மாண்ட்சுகிக் (Maria Mandzukic) 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய குரோஷிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மைதானத்தில் திரண்டிருந்த அந்நாட்டு ரசிகர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

Video Source: FIFATV

crotia wins england enters football worldcup finals

Timetamil.com