இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் மரண தண்டனையை கைவிடுங்கள் – மன்னிப்புச் சபை

0
357
Amnesty International called Sri Lankan government abandon execution

(Amnesty International called Sri Lankan government abandon execution)

குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகித்த குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும், விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை மாற்ற வேண்டும், மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடையை விதிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தின் வேறு பல நாடுகள் ஈவிரக்கமற்ற இந்த நடைமுறையை பின்பற்றிய வேளை இதனை கைவிட்டதன் மூலம் இலங்கை முன் மாதிரியாக விளங்கியதுடன் தலைமைத்துவம் வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல உலக நாடுகள் மரண தண்டனையை கைவிட்டுள்ள தருணத்தில் இலங்கை பிழையான திசையில் பயணிக்கின்றது.

பயங்கரமான இந்த நடைமுறையை பின்பற்றும் சிறிய எண்ணிக்கையிலான நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைந்து கொள்ள முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

(Amnesty International called Sri Lankan government abandon execution)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites