ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

0
414
Gripping Thailand rescue become Hollywood movie

கடந்த மாதம் 23 ஆம் திகதி தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவர்களது 25 வயது கால்பந்து பயிற்சியாளர், சியாங் ராய் என்னும் பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர்.(Gripping Thailand rescue become Hollywood movie)

எனினும், திடீரென பெய்த பெரு மழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்தது. அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர். எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து வீரரை மீட்பதற்காக கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணியின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு சிறப்பு நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் தாய்லாந்து கடல் அதிரடிப்படையினர் குகைக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆபத்துகள் நிறைந்த, வெள்ள நீரில் முழ்கியிருக்கும் மிகவும் குறுகலான குகைப்பாதை வழியாக, அங்கு கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்களையும், 25 வயது கால்பந்து பயிற்சியாளரையும் மீட்புக் குழுவினர் கடும் சிரமத்துக்கிடையில் அழைத்து வந்தனர்.

இதையடுத்து, குகைக்குள் சிக்கிய 13 பேரின் கதி குறித்து கடந்த 17 நாட்களாக உலகம் முழுவதும் நீடித்து வந்த பரிதவிப்பு முடிவுக்கு வந்தது. இது, தாய்லாந்திலும், பிற நாடுகளிலும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச் சம்பவம் விரைவில் ஹாலிவுட் திரைப்படமாக உருவாகவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பியூர் ஃபிளிக்ஸ் திரைப்பட நிறுவனம், தாய்லாந்து சம்பவத்தைத் திரைப்படமாக்க முடிவெடுத்துள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் இதுகுறித்து ஊடகங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்துள்ள ஸ்காட், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடல் அதிரடிப்படை முன்னாள் வீரர் குனான், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணம் அடைந்தது தன்னைத் தனிப்பட்ட முறையில் பாதித்ததாகக் கூறியுள்ளார். மரணமடைந்த குனானும் ஸ்காட்டின் மனைவியும் பள்ளிக்காலங்களில் நண்பர்களாக இருந்தவர்கள்.

அத்துடன் இப் படத்துக்காக அதிகபட்சமாக ரூ. 413 கோடி வரை (60 மில்லியன் டாலர்) செலவழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

அஜித்தையும் விட்டுவைக்காது நக்கல் செய்து புதிய போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2 படக் குழு..!

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Gripping Thailand rescue become Hollywood movie