சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை

0
597
targeted Drug selling tourists

மாத்தளை செம்புவத்த பிரதேசத்திற்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (targeted Drug selling tourists)

கண்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபரிடமிருந்து கஞ்சா போதைப் பொருள் 10 கிராம் மற்றும் ஐஸ் எனும் போதைப் பொருள் 120 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்து நபர் ராகம பிரதேசத்தை சேர்ந்த நபர் என்றும் நீண்ட காலமாக முச்சக்கர வண்டிச் சாரதி போன்று வேடமிட்டு இரகசியமான முறையில் இந்தப் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் நபர்கள் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல்களை வழங்குமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; targeted Drug selling tourists